தூத்துக்குடி, நவம்பர் 20 –
தூத்துக்குடி ரூரல் உட்கோட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்டெர்லைட் பைபாஸ் ஜோதி நகர் விலக்கு பகுதியில் இன்று அதிகாலை 04.30 மணிக்கு லோடு வேன் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலைகள் மூட்டைகள் பதுக்கி வைக்கபட்டுள்ளதாக க்யூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் விஜய அனிதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார், இசக்கிமுத்து, காவலர் பேச்சி ராஜா ஆகியோர் அந்த பகுதியில் சோதனை செய்ததில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 59 மூட்டைகளில் பீடி இலைகள் (சுமார் 2000 கிலோ) கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 69 இலட்சம் ஆகும்.



