தஞ்சாவூர், நவம்பர் 20 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்த தேர்தல் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யாத்ரு பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடை பெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, பேராவூரணி, திருவையாறு , பாபநாசம், திருவிடைமருதூர் கும்பகோணம் ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கா ளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யாத்ரு, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக எத்தனை சதவீதம் மக்களிடம் படிவம் வழங்கப்பட்டுள்ளன, எத்தனை சதவீத படிவங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், உதவி ஆணையர் (கலால்) உள்பட பலர் கலந்து கொண்டனர்



