தர்மபுரியில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்திய விவசாயிகளின் 12 அம்ச கோரிக்கையான 9 -12 -2021 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது ஒன்றிய வேளாண்மை துறை செயலாளர் அவர்களால் ஒப்பந்த கையெழுத்து இடப்பட்டதை அமல்படுத்த கோரி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரு எம். முனிராஜ் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினர் திரு ஜே. பி.கிருஷ்ணன் மாநில தலைவர், திரு எஸ். பி. மூர்த்தி மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தார். திரு கே. முனியப்பன் மாவட்ட பொதுச் செயலாளர் வரவேற்பு ஆற்றினார். திரு எஸ். கோணப்பன் மாநிலத் துணை அமைப்பாளர் துவக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு ஜி. கணேசன் மாவட்ட விளம்பரச் செயலாளர், திரு எம். ராமசாமி மாவட்டத் துணைத் தலைவர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட ,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



