By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்

Last updated: September 23, 2025 11:23 am
September 23, 2025
37 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப். 23 –

மயிலாடுதுறையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றி பேசுகையில்: 43 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெறக்கூடிய 2153 கோடி ரூபாயை தர மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. மத்திய அரசின் அநீதிகளை எதிர்த்து தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். தமிழக அரசு கடந்த நாலரை வருடத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 46 ஆயிரத்து 167 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

அதே வேளையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களுக்கு கல்விக்காக 78 ஆயிரம் கோடிதான் என்றால் கல்வியை நமக்கு கொடுப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த தொகுதியையும் கைப்பற்றி பாஜக அறிதி பெரும்பான்மை கிடைக்காத வகையில் செய்த ஒரே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்பதால் தான் குறுக்கு வழியில் பாஜக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், பாஜக பொறுப்பேற்று பத்தாண்டுகள் நிறைவடைந்தும் தற்போது வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. அடுத்த வருடம் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சொல்கிறார்கள் அதுவும் எடுப்பார்களா என்று தெரியவில்லை. 1931 இல் இந்தியாவின் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்று சொல்லி பீகாரில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பதற்காக பாஜகவுக்குவு எதிராக வாக்களிப்பவர்கள் 64 லட்சம் பேரை ஒரே நாளில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கி உள்ளனர். இதனை கண்டித்து மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குத்திருட்டு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் மத்திய அரசு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பதை செயல்படுத்த முனைவதால் 68,000 வாக்குச்சாவடிகளிலும் திமுக முகவர்களை நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயரையும் நீக்க விடமாட்டோம் என்பதை எச்சரிக்கும் வகையில் தான் இந்த ஓரணியில் தமிழ்நாடு தீர்மான எதிர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.

கீழடியில் இரண்டு முறை ஆய்வு செய்தும் அதன் முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதேபோல் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்பாடு தமிழ்நாட்டில் தான் முதலில் தொடங்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளததை அங்கீகரிக்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பை எதிர்த்து முதலமைச்சரின் பின்னால் தமிழக மக்கள் நிற்க வேண்டும் என்றார். தொடர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியேற்றனர். பின்னர் மாற்றுகட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இதில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மாவட்ட பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்த கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்
வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி
ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்க பூமிபூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ராட்டினம் அருந்து விழுந்ததில் 2 குழந்தைகள் காயம்

May 16, 2025
80 Views
கன்னியாகுமரி அருகே விடுதி மேலாளர் மீது தாக்குதல்; கும்பலுக்கு போலீஸ் வலை
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account