திருச்சியில் நடைபெற்ற
தமிழ்நாடு பட்டாலியன்
என்.சி.சி. குரூப் போட்டியில் திண்டுக்கல் பட்டாலியன் அணி 2 – ஆம் இடம் பிடித்தது.திருச்சியில் நடைபெற்ற என்.சி.சி பட்டாலியன்
யூனிட்டுகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில்,
துப்பாக்கி சுடுதல், மலை ஏறுதல்,
அணிவகுப்பு மரியாதை செய்தல் மற் றும் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா
அணிவகுப்பில் கலந்து கொண்டவர் எண்ணிக்கை போன்றவை
அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி தமிழ்நாடு பட்டாலியன் குரூப் இரண்டாம் இடம் பெற்றது.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருச்சி முன்னாள் குழு கமாண்டர் கர்னல் சிவசங்கரன், கர்னல் விஜயகுமார் வெற்றி பெற்ற திண்டுக்கல் 14 தமிழ்நாடு பட்டாலியன் குரூப் சார்பில் லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன், சுபேதர் முருகன், லெப்டினன்ட் டாக்டர் அருண், பயிற்சி அதிகாரி சங்கர் ஆகியோரிடம் பரிசுகளை வழங்கினார்கள்.



