ராமநாதபுரம், பிப்.24-
தமிழகத்தில் மகளிர் நலன் காக்கும் அரசாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலன் காத்து பல்வேறு அரிய பல நலத்திட்டங்கள் செயல் படுத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி 2026 ல் மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று
ராமநாதபுரம்
திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் சபதம் ஏற்று பேசி திமுக நிர்வாகிகளை உற்சாகம் அடைய செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர் கூட்டம் ராமநாதபுரத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி தலைமையில் நடந்தது. மாவட்ட
துணை செயலாளர் கருப்பையா வரவேற்றார்.
மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்எல்ஏ இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா, சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கொடி சந்திரசேகர் (பரமக்குடி), அருண் (திருவாடானை), சுதர்சன் (ராமநாதபுரம்), மகளிரணி துணைத்தலைவர் பவானி ராஜேந்திரன், தேர்தல் பணி பிரிவு செயலாளர் சுந்தர்ராஜ் உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில்
மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பேசியதாவது: ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதி மீனவர் சங்கப்பிரதிநிதிகள்
முதலமைச்சர் ஸ்டாலினை பிப்.18 ல்
சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர். அவர்கள் வைத்த கோரிக்கைகளை துரிதமாக பரிசீலனை செய்து ரூ. 360 கோடி மதிப்பில் மீனவர் நலன் காக்கும் திட்டங்களை பிப்.18 அன்று மாலை அறிவித்தார்.
மகளிர் மகளிர் நலன் காக்கும் அரசாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என் உயரிய சிந்தனையை பெரியார், அண்ணா கண்ட கனவை
கலைஞர் கருணாநிதி நிறைவேற்றினார். அந்த கனவெல்லாம் உள்ளடக்கிய தற்போதைய நம் தலைவர் ஸ்டாலின் மே 7, 2021ல் ஆட்சி பீடத்தில் ஏறியவுடன் அரசு நகர பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண திட்டம் எனும் விடியல் பயண திட்டத்தில் முதல் கையெழுத்திட்டு மகளிர் நலன் காத்து வருகிறார்.
டாக்டர் கலைஞர் பெயரில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை அறிவித்த போது உங்கள் சகோதரன் ஸ்டாலின் தருகிறேன் என்று சொன்னார்
தொகுதிக்கு 30 ஆயிரம் மகளிர் உரிமைத்துறை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கடந்த 11 தேர்தல் வெற்றியை போல் 2026 தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றி பெறும். தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தலா 50 ஆயிரம் மகளிர் வாக்குகளுடன் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம்.
மார்ச் 1 தலைவர் பிறந்த நாளை கடந்த காலங்களை போல் மிக சிறப்பாக கொண்டாட நாம் அனைவரும் முனைப்புடன் செயல் பட வேண்டும். தமிழகத்தில் 4 வது மொழிப்போர் தலைவர், இளைஞரணி செயலாளர் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இளைஞரணி, மாணவரணி போராட்டங்களில் நாம் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மார்ச் 1 தலைவர் பிறந்த நாளில் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி உதவிட வேண்டும் மற்றும் 72 நாட்கள் மாவட்டம் முழுவதும் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும், இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போகலூர் ஒன்றிய செயலாளர் குணசேகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம் துணை சேர்மன் பிரவீன் தங்கம், கவுன்சிலர்கள் ரமேஷ் கண்ணா, கமுதி போஸ் உட்பட மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.