பரமக்குடி,மே.31: தேனி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திடலில் யூ எஸ் ஏ அத்தலடிக் அகாடமி நடத்திய மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் ஓட்டப்போட்டி, தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகளில் கலந்து கொண்டனர்.இதில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அசுகரன் விளையாட்டுக் கழக வீரர்கள்
18 தங்கம், 18 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர்.
பட விளக்கம்
தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பரமக்குடி அசுகரன் மாணவ மாணவிகள்.