தேனி மாவட்டம், அக்டோ- 17 தேனி மாவட்டம், சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உத்தமபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்பட்டது அதில் பல்வேறு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது அதன் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சின்னமனூர் எம்.எம்.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் இரவங்கலார் மகாராஜா மெட்டு வெண்ணியார் மணலார் மேல்மணலார் ஹைவேவிஸ் மற்றும் மேகமலை ஆகிய மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வுக்கு வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்கள் பெற்றனர் மகளிர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் தேவபிரதிக் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று பொது மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது



