தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் தமிழ்நாடு சாலை பணிப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
மாநில பொது செயலாளர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பழனி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் ஈஸ்வரன்,மாநிலத் துணைத் தலைவர் ஜான் பாஷா, மாநில பிரச்சார செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய செல்வராஜ் துவக்க உரை ஆற்றினார். இந்த பொதுக்குழுவில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னிவளவன் மற்றும் சின்னசாமி, குமார், ராமச்சந்திரன், சுதர்சனன், கிருஷ்ணன் ,கணபதி, மனோகரன், முருகேசன், ஏகாம்பரம், ரவி, செல்வி, கந்தசாமி,மரியா ஜோசப் உட்பட தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பனிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். நெடுஞ்சாலை துறை மில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் சாலை பணியாளர்கள் தகுதி இருந்தும் மொத்த பனிக்காலமும் எந்தவித பதவி உயர்வு பெறாமலும் பணி ஓய்வு பெறும் சூழல் உள்ளது. எனவே மற்ற துறைகளில் உள்ளது போல் பணி ஓய்வுக்கு குறைந்தது 3 ஆண்டுகளுக்கு முன்பாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில் மாநில பொருளாளர் பாஸ்கர் அவர்கள் நன்றி கூறினார்.