சிவகாசி ஆக-19
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் நான்காவது
மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பட்டாசு சம்பந்தமான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பட்டாசு வணிகர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர், ராஜா சந்திரசேகர் பேசியதாவது.
பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் அனைவரும் அரசு அதிகாரிகளின் நன்மதிப்பை பெரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சட்டத்தில் வழிகாட்டப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த தொழிலை நாம் சிறப்பாக செய்ய முடியும் மேலும் வெளிமாவட்டங்களில் உள்ள பட்டாசு கடைகளுக்கான உரிமம் எடுக்கும் முறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் பேசி இருப்பதாகவும் உரிமம் எடுக்கும் விஷயத்தில் உள்ள பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதன் பின்னர் மாநாட்டில் நிரந்தர பட்டாசு கடை உரிமத்தை 90 நாட்களுக்குள் வழங்குதல் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளின் உரிமத்திற்கான கால வரம்பினை ஐந்தாண்டுகள் வரை நீட்டித்தல் தற்காலிக உரிமத்தினை தீபாவளிக்கு 30 தினங்களுக்கு முன் வழங்குதல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில மாநாட்டின் ஏற்பாட்டினை சங்கத்தின் செயலாளர் இளங்கோவன், மற்றும் இணை செயலாளர் ரவிதுரை மற்றும் பிரபாகரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.