தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள ஸ்ரீ சிவசுப் பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் கடை வீதியில் எழுந்தருளி யிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமூக ஸ்ரீ மருதவாணேஸ்வரர் திருக்கோ விலில் எட்டாம் ஆண்டு ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. ஸ்கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமூக ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வாணியார் சமூக மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



