கோவை, செப். 27 –
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மேக்ஸ்வெல் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 4 ம் ஆண்டு துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விருதுகள், நட்சத்திர கலைவிழா போன்றவை வரும் ஞாயிற்றுக்கிழமை 28-9-2025 தேதியில் நடைபெற உள்ளது.
இதுவரை ஏழை எளிய கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தையல் மிஷின்கள், எளிய குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் நோட்டு புத்தகங்கள், தொண்டு அமைப்புகளுக்கு நன்கொடைகள், மாணவர்களுக்கான மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியிகள், இலவச தொழில் ஆலோசனைகள், பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்குதல் போன்ற நிகழ்ச்சியை கடந்த காலங்களில் சிறப்பாக செய்து வந்துள்ளது.
மேலும் புதிய தொடக்கமாய் 4 ம் ஆண்டு துவக்க விழாவில் மாற்று திறனாளிகளுக்கு வீல் சேர், ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, மற்றும் கல்வி உபகரணங்கள் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவை வழங்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் சின்னத்திரை கலைஞர்கள் பங்கேற்கின்றன நிகழ்ச்சி கோவை புதூர் வி.எல்.பி ஜானகி அம்மாள் கல்லூரியில் மாலை 4 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே கோவை மாவட்டத்தை சார்ந்த மாணவ மாணவிகள் சமூக அமைப்புகள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மேக்ஸ்வெல் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொண்டனர்.



