தருமபுரி ஏப். 29
தருமபுரியில் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு விழா வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிறந்த உள்ளூர் தொலைக்காட்சி, சிறந்த நற்பணி . மன்றங்களுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் சிலம்பரசன், கல்லூரி முதல்வர் துரை, நேரு யுவகேந்திரா கணக்கு திட்டம் மேற்பார்வையாளர் அப்துல் காதர், சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணன், ஓம் சக்தி மருத்துவமனை டாக்டர் பூங்கொடி, பத்திரிக்கையாளர்கள் , சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலை நிகழ்ச்சி, சிலம்பம், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.