வேலூர் 02
வேலூர் மாவட்டம் பாகாயம் ஸ்கட்டர் விளையாட்டு மைதானத்தில் சி.எம்.சி செவிலியர் கல்லூரியின் விளையாட்டு ஆண்டுவிழா நேற்று பாகாயத்திலுள்ள ஸ்கடர் விளையாட்டு மைதானத்தில் காலை 8.00 மணியளவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் சி. ஆறுமுகம், உதவி பேராசிரியர் (ஓய்வு), தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், சென்னை, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல்,குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம்,தொடர் ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றது.