தருமபுரியில் முன்னாள் முதல்வர் டாக்டர். மு. கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை யோட்டி அமைதி பேரணி தருமபுரி மாவட்ட கழக சார்பில் நடைபெற்றது. இப்பேரணி ராஜகோபால் கவுண்டர் பூங்காவிலிருந்து நான்கு ரோடு அண்ணா சிலை வரை நடைபெற்றது .இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம், தருமபுரி நகர செயலாளர் நாட்டான் மாது மற்றும் மாவட்ட, நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .பின்னர் மாவட்டகட்சி அலுவலகத்தில் உள்ள கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



