திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி வட்டாரம், கொசவப்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரகதோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின்கீழ் பங்கேற்று கிராமப்புற மதிப்பீடு முறைகளை கிராம மக்களுடன் இணைந்து வரைந்து அதனை பற்றி விளக்கம் அளித்தனர். சாணார்பட்டி குழு மாணவிகள் ஆ.சுபா,வ.சுபா, சி.செ.சுபஹரிணி , ப.சன்மதி ,செ.சுருதிகா, ஆ.சுதக் ஷினா,சு.பி.சுவேதா,ச.சுவாதிகா , ச.ரே.சுவீதா , தி.சுவேதா ஆகியோர் சமூக வரைபடம்,வள வரைபடம்,இயக்க வரைபடம், சிக்கல் வரைபடம்,பருவநிலை வரைபடம், கிராம கால கோடு மற்றும் அன்றாட வாழ்வியல் நடைமுறை வரைப்படம் போன்றவை பற்றி விளக்கம் அளித்தனர்.



