திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்
பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். மேலும் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. முதலமைச்சர் காவலர் பதக்கம் 69 பேருக்கும், சிறப்பாக பணிரிந்த காவல்துறையினர் 100 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தொடர்ந்து விடுதலைப்போராட்ட தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை அணிவித்து, கொளரவித்தார்.
97 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சிதலைவர் பூங்கொடி வழங்கினார்.திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி என 5 பள்ளிகளைச் சார்ந்த 267 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கண்கவர் கலைநிகழ்ச்சியை நடத்தினர். நிறைவாக கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.



