சிவகங்கை:பிப்:11
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் கவியோகி சுத்தானந்த பாரதி பெயரில் மாவட்ட மைய நூலகம் செயல் பட்டு வருகிறது . இந்த நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு வாசகர் வட்டத் தலைவர் அன்புத் துரை தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல்பாண்டி முன்னிலை வகித்தார் .
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மைய நூலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் நூலகத்திற்கு போதுமான பாதுகாப்பு இல்லை . எனவே அரசு மூலம் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வாசகர் வட்டம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் . டி .என். பி. எஸ். சி போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களின் நன்மையைக் கருதி இந்த நூலக வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் . ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினர்களான நூலக நண்பர்கள் திட்டத்தின் சார்பில் எழுத்தாளர் ஈஸ்வரன் , மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன், மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் , நல்லாசிரியர் புலவர் பகீரதநாச்சியப்பன் , ஹேமமாலினி , செல்லமணி ,சாஸ்தா சுந்தரம் , சிவசங்கரி , திலகவதி , கருணாகரன் , கோவிந்தன், சேவுகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் முத்துக்குமார் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் நூலகர் கனகராஜ் நன்றி கூறினார் .