சென்னை, டிச-27,
பொது சுகாதாரத்திற்கான சித்த மருத்துவம் என்ற தலைப்பில் 8வது சித்த மருத்துவ தினம் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறறது.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர். மரு என்.ஜெ.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா கலந்து கொண்டு. பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு நூல் மூன்றாம் பகுதியை வெளியிட்டார்.
மேலும் இவ்விழாவில் என் .சி .எஸ் . எம், யுனானி சித்தா மற்றும் சௌவா ரிக்பாவின் வாரிய தலைவர் மரு கே. ஜெகந்நாதன், பி .எச் . இயக்குனர் டாக்டர் ரமன் மோகன் சிங், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் டி . ஆனந்தன், மருந்தியல் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் இ .சசிகலா, பேராசிரியர்கள் டாக்டர் பி. பார்த்திபன், டாக்டர் பானுமதி, டாக்டர் செந்தில்வேல், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மரு. எஸ் செல்வராஜ், சியாமளா இராஜ்குமார், ஆர். இராஜேந்திரகுமார், புது தில்லியில் உள்ள பி .சி. ஐ .எம் ஆராய்ச்சியாளர் மரு. விஜயகுமார், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் 240 சித்த மருத்துவ தாவரங்கள் மற்றும் 130 மூலப்பொருட்கள், பழங்கால சித்தர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பழங்கால புத்தகங்கள், சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் சித்த மருத்துவத்தின் பல்வேறு சிகிச்சை முறைகள் அடங்கிய கண்காட்சிகள் நடைபெற்றன .
இதில் சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கேரளப் பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பதக்கம், பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதில் 1600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.