தருமபுரி மே 15
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளியின் மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ் டூ சிபிஎஸ்இ பொது தேர்வில் மாணவிகள் தூயா, கீர்த்தனா ஆகியோர் 500க்கு 492 மதிப்பெண் பெற்றுள்ளனர். சுசீந்தர், மாணவி ருது வர்ஷினி ஆகியோர் 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம். மாணவிகள் மஹதி பிரியதர்ஷினி, அனுவர்ஷினி ஆகியோர் 485 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் மாணவி ஆராதனா 500க்கு 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவிலும் மாநில, மாவட்ட அளவிலும் சாதனை படைத்துள்ளார். மாணவிகள் யாழினி, ஆஷிபாபர்ஹானா 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம். மாணவி தன்வி 494 மதிப்பெண் பெற்ற மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். பள்ளியில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேர் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களை செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து ரொக்க பரிசு கேடயம் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், பள்ளி முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் செந்தில் முருகன், துணை முதல்வர் ராஜ் குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர் ஞானகவிதா, தீபா, துணைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஹினாபானு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள். முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் செந்தில் பப்ளிக் பள்ளியின் மாணவ, மாணவிகளை நேரில் பாராட்டினார்.