ஈரோடு ஜன 27
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5 ந் தேதி நடக்கிறது . இதையொட்டி அமைச்சர் முத்துசாமி வேட்பாளர் வி சி சந்திரகுமாருடன் கடந்த சில நாட்களாக வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று
ஈரோடு மாநகராட்சி 38 மற்றும் 39 வது வார்டுகளுக்கு உட்பட்ட ராஜகோபால் தோட்டம் வண்டியூரான் கோவில் வீதி காமாட்சி அம்மன் கோவில் மரப்பாலம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் நின்ற ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் . நான் முதல்வன் திட்டம் விடியல் பயணத்திட்டம் புதுமைப்பெண் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை தமிழ் புதல்வன் திட்டம் மக்களை தேடி மருத்துவம் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் காலை உணவு போன்ற உள்ள திட்டங்கள் உள்பட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே நீங்கள் தொடர்ந்து தி மு க வுக்கு ஆதரவு அளித்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் வாக்காளர்கள் எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே என்று வாக்குறுதி அளித்தனர்.