திண்டுக்கல் மாவட்டம், ஏப். 29
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம், சாமியார்பட்டியில் உள்ள இந்து உதவி பெறும் துவக்கப் பள்ளியில் 88 – வது பள்ளி ஆண்டு விழா மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக்குழுத் தலைவர் L.சவடமுத்து தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சேவியர் மேரி சோபியா பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். ஆசிரியைகள் முருகேஸ்வரி, துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய செஞ்சிலுவை சங்க திண்டுக்கல் மாவட்ட சேர்மன் நாட்டாண்மை Dr.N.M.B. காஜாமைதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 5 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டங்கள், விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து உதவி பெறும் துவக்கப் பள்ளியின் பள்ளிக்குழு செயலாளரும், தாளாளருமான T. ஜெயராம் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.