தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் புதிதாக பதவி ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் புகழேந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநில முன்னாள் பொதுக்குழு செயலாளர் மணி, பெரியசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பத்திரிகையாளர் சங்க சார்பில் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.



