கோவை ஜன:20
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா நாட்டின் கலாச்சாரக் குழுவினரை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்வில் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம், நேரு கல்வி குழும இயக்குனர் முரளிதரன், இந்தியா ரஷ்யா கலாச்சார நட்புறவு மையத்தின் தலைவர் தங்கப்பன், தொழில் அதிபர் கணேஷ், அறங்காவலர் மஞ்சுளா தேவி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து மாசாணி அம்மன் கோவிலின் பாரம்பரிய வரலாற்றை ரஷ்ய நாட்டு கலாச்சார குழுவினரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.



