தருமபுரி, அக்டோபர் 4 –
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாத நடு சனிக்கிழமை யை யொட்டி அக்கன அள்ளியில் உள்ள ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி பக்தர்களுக்கு தங்க கவசத்தில் காட்சியளித்தார். மணியம்பாடியில் உள்ள ஸ்ரீ வெங்கடரமண சுவாமி தங்ககவசத்தில் பக்தர்கள் காட்சியளித்தார். பழைய தருமபுரியில் உள்ள வரதக்குப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருக்கோவில் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மணியம் பாடியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் இதில் பி .சி .ஆர். மனோகரன் மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



