கிருஷ்ணகிரி,ஜன.12- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையம் சார்பில் பர்கூர் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காவல் ஆய்வாளர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. காவல் துணை கண்காணிப்பாளர் எம். முத்துகிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்தார். எஸ்.ஐ. கனிமொழி, எஸ்.ஐ.முரளிதரன்,எஸ்.ஐ.மாதவன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பதாகைகள் ஏந்தி பேரணி முக்கிய வீதி வழியாக சென்று பர்கூர் பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.



