அரியலூர்,அக்;21
தென்காசி மாவட்டம் சின்ன ஒப்பணையாள்புரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி மகன் ராஜசேகர்(32). இவர், நேற்று முன்தினம் சென்னை தாம்பரத்திலிருந்து, கோவில்பட்டி வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது ஊருக்கு பயணம் செய்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நேற்று முன்தினம் இரவு ரயில் வந்த போது, ராஜசேகர் தவறி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து ரயிலில் பயணம் செய்தவர்கள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இரவு முழுவதும் தேடிய நிலையில், செந்துறை அடுத்த வெள்ளூர் கிராமம் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து காயத்துடன் கிடந்துள்ளார். அருகே சென்று பார்த்தபோது உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரை மீட்ட ரயில்வே போலீஸார், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்