மயிலாடுதுறை ஏப் 23
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய்க்கு உரிய இக்கோயிலில் காரைக்குடி, பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, மதுரை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தினரின் குலதெய்வக் கோயிலாகவும் விளங்குவதால் நகரத்தார் சமுகத்தினர் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 2 வது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம். அவ்வகையில் இரண்டாவது செவ்வாய்க்கிழமையான நாளை சாமி தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரையாக தங்கள் ஊர்களிலிருந்து மஞ்சள் தடவிய வேப்பிலை செருகிய குச்சியினை கையில் ஏந்தி பலநூறு கிலோமீட்டர் நடைபயணமாக மயிலாடுதுறை வழியாக கோவிலுக்கு செல்கின்றனர்.
கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் சென்பகமூர்த்தி உபயத்தில் 27வது ஆண்டு அன்னமளிப்பு விழா மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீபடைவெட்டி மாரியம்மன் ஆலயத்தில் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணிமுதல் இரவு 10மணி வரை 3 வேலையும் சுடச்சுட சமைத்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபொல் நாளை வைத’;திஸ்வரன்கொவிலில் அன்னதானம் வழங்க உள்ளதாக திருச்சி ஜி.டி. உரிமையாளர் தியாகராஜன் மற்றும் சினிமா தியெட்டர் உரிமையாளர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வருகின்றனர்.



