இராமேஸ்வரம், டிச. 22 –
ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு அதிகாலை வந்தடைந்த புவனேஸ்வர் விரைவு ரயில் வண்டியை ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் சோதனை மேற்கொண்ட போது பதிவு இல்லாத பெட்டியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை.
ரயில்வே இயக்குனர் வன்னிய பெருமாள் கிடைத்த ரகசிய தகவலையடுத்து திருச்சி ரயில்வே மாவட்ட கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் இராமேஸ்வரம் இருப்பு பாதை காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் அன்புச்செல்வன் ஆகியோர் தலைமையில் புவனேஸ்வர் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த புவனேஸ்வர் விரைவு ரயில் வண்டியின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கருப்பு கலர் பேக்கை சோதனை செய்து பார்த்ததில் அதில் சுமார் 10 கிலோ எடை கொண்ட 05 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



