தர்மபுரியில் போதை இல்லா தமிழ்நாடு முன்னிட்டு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிப்புக்குரிய ஸ்டீபன் ஜேசுபதம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி தர்மபுரி நான்கு ரோடு முதல் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேரணியில் போதை, கஞ்சாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



