நாகர்கோவில் மார்ச் 6
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகள் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது என தெரிவித்து அவற்றை துரிதப்படுத்த வேண்டும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரயில்வே துறை சம்மந்தமான பல்வேறு திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் தேவைகளை உணர்ந்து நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்து, அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த திட்டங்களை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், புதிய இரயில்வே பாலங்கள் போன்ற இந்த பணிகள் தொடங்கிய போதிலும் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை துரிதப்படுத்தி இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து கேட்டுக்கொண்டார்.