தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றுதல் ,புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ் ,வேலை வாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 4 90 மனுக்கள் பெறப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுவதை தொடர்ந்து செம்மொழியின் சிறப்பையும், முத்தமிழறிஞரின் தமிழ் தொண்டின் பெருமையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் மாநில, தருமபுரி மாவட்ட அளவில் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1.05 லட்சம் மதிப்பில் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கி பாராட்டினர். வருவாய் அலுவலர் கவிதா, முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, தமிழ் வளர்ச்சி துறை கல்வி இயக்குனர் ஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் கண்ணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்



