தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (10.06.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.21.93 இலட்சம் மதிப்பீட்டில் பிரத்யேமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், காது கேளாத மற்றும் வாய்பேசாதோருக்கான ஸ்மார்ட் போன்கள், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இஆப., அவர்கள் வழங்கினார்.உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி. செண்பகவள்ளி உள்ளார் .



