கிருஷ்ணகிரி,செப்.18- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊதியர்கள் மற்றும் பென்சனர் நலச் சங்கப் பேரவைச் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ராஜகோபாலன் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சங்கத்தின் சார்பில் தங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும், பணி ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஓய்வுகால பணப்பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தும் போக்கை கண்டித்தும், ஒன்பது வருடங்களாக 95 ஆயிரம் ஓய்வு பெற்றவர்களின் வாழ்வாதாரமான பஞ்சப்படி உயர்வு வழங்காமல் வதைக்கின்ற தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதிய உயர்வுகளை வழங்காமல் ஓய்வு பெற்றவர்களை வஞ்சிக்கும் போக்கை கண்டித்தும், பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த கண்டன கூட்டத்தில் சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, கேசவன், நாகராஜ், திம்மராஜ், சக்கரவர்த்தி, லட்சுமணன், சோமசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics