கன்னியாகுமரி, அக். 2 –
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வருகிறது. துவக்க நாளான 25ம் தேதி துவங்கியது. முகாம் நடைபெற்ற நாட்களில் தினமும் விழிப்புணர்வு பேச்சுக்கள், களப்பணி, சிறப்பு நிகழ்வுகள் மற்றும் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இம்முகாமிற்கு பள்ளியின் தாளாளர் கால்வின் தலைமைதாங்கி தலைமையுரையாற்றினார். தலைமையாசிரியை அனு ஜெ பிரீதா முன்னிலை வகித்து ஆளுமை வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரி மேபல் புஷ்ப ரதி இம்முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்தினார்.
முகாமில் நசீம் இஸ்மாயில் யோகா பயிற்சியும், ரோகிணி கல்லூரியின் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நவீன் ஜாஸ் டிஜிட்டல் கல்வியில் இளைஞர்களின் பங்கு குறித்தும், உலகமயமாதல் குறித்து ஆசிரியர் கிங்ஸ்லியும், கருத்துப்புயல் அறிவு கிளர்ச்சி குறித்து டினா பெரினும், காலம் பொன் போன்றது என்ற தலைப்பில் ஆசிரியை ஜான்சி ரீடாவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆசிரியை உஷாவும், மழைநீர் சேகரிப்பு குறித்து ஆசிரியை ஞான சுகந்தியும் பேசினர். சிறப்பு நிகழ்வாக என் எஸ் எஸ் மாவட்ட தொடர்பு அதிகாரி சிபு அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். முகாமின் ஒரு பகுதியாக ஏராளமான மரங்கள் நடப்பட்டன. இந்த முகாமில் ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், என் எஸ் எஸ் மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



