இரணியல், ஏப். 8 –
வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. வில்லுக்குறி பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த லாரி சாலை ஓரம் நின்ற மின் கம்பத்தில் மோதி கடைகளையும் இடித்து தள்ளியது. அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் அதன் மீது மோது விபத்துக்குள்ளானது. மின்கம்பம் சேதமடைந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்தது.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனிடையே மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின்தடையை சரி செய்தனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒரு மின்பம் மற்றும் 3 கடைகளும் சேதம் அடைந்தன. அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



