தேனி
பெரியகுளத்தில் மதுபான பார் கடைகளை மூட வலியுறுத்தி நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் அந்த மக்களை வஞ்சிக்கும் விதமாக குடியிருப்பு பகுதியில் மதுபான பார் கடையை திறந்து தினமும் பிரச்சினை நடந்து வருகிறது.
மேலும் அடிப்படை வசதிகள் மிக தொய்வாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து இன்று நடைபெற்ற பெரியகுளம் நகர் மன்ற கூட்டத்தில் திமுக 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அபிதா பேகம் சலீம் விசிக நகர்மன்ற உறுப்பினர் 11-வது வார்டு பவானி முருகன் திமுக 12-வது வார்டு சாஹிரா பானு அஜ்மல்கான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 16-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்
உள்பட
பெரியகுளத்தில் உள்ள மதுபான பார் கடையை மூட வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் உள்ள நகர் மன்ற உறுப்பினர்களில் மக்கள் பிரச்சினை முன் நிறுத்தி குரல் கொடுத்து
பெரியகுளத்தில் உள்ள மதுபான கடைகள் மூடும் வரை அனைத்து போராட்டம் தொடரும் என கவுன்சிலர்கள் அறிவிப்பு