சிவகங்கை:மே:06
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் ஆலோசனை படியும் முன்னாள் தேசிய தலைவர் H.ராஜா முன்னிலையிலும் சிவகங்கை மாவட்ட தலைவர் D.பாண்டித்துரை அவர்கள் தலைமையிலும் சிறப்பு அழைப்பாளர் மதுரை மாவட்ட முன்னாள் தலைவர் சசிராமன் கலந்து கொண்டு சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி(எ)சத்தியநாதன், சுகனேஸ்வரி , நாகேஸ்வரன், நகர் தலைவர் M.R.உதயா மற்றும்
பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாவட்ட மண்டல அணி பிரிவு கிளை கமிட்டி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் பஹல்காம் பகுதியில் 26 அப்பாவி இந்தியர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.



