ஊத்தங்கரை ஜூலை 26
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. இந்தநிகழ்வில் குன்னத்தூர், வாலிபட்டி, ராமகிருஷ்ணபதி, கே பாப்பாரப்பட்டி, கிராமங்களுக்கு உட்பட்ட பகுதி மக்கள் பயன் தரும் வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்கள் பயன்பெறும் வகையில் காலை 10 மணி முதல் 3மணி வரை நடைபெறுகிறது இந்த முகாமில் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள் தலைமையில் நடைபெற்றது இந்த முகாமில் எரிசக்தி துறை தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துணை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை காவல்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வாழ்வாதாரக் கடன் உதவிகள் என அரசு சார்பில் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஒரே பகுதியில் இணைந்து மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரசன்னா, மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், மகேஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், ஜனார்த்தனன், உமா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குன்னத்தூர்- மாதம்மாள் முனிராவ், வலிப்பட்டி தலைவர்- பரந்தாமன், ராமகிருஷ்ணபதி -இந்திரா ராமன், கே.பாப்பாரப்பட்டி -திருப்பதி, கவுன்சிலர்கள் முரளி, சக்திவேல், சவிதா சேட்டு,ஊராட்சி செயலாளர்கள் திமுக மாவட்ட கவுன்சிலர் கதிரவன், மாவட்ட குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய செயலாளர் வசந்தரசு, கிராம நிர்வாக அலுவலர் அருண், தலைமை ஆசிரியர் விமலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன்,அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் சமூக ஆர்வலர் கந்தன், இணையத்கான், பங்கேற்றனர்



