ஈரோடு மே 30
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் விடியல் சேகர் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு முதன்மை வங்கியின் மேலாளர் விவேகானந்தனிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர் அதில் கூறப்பட்டுள்ளதாவது மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நகை அடகு வைப்போருக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை தெரிவித்துள்ளார்கள். இது ஏழை எளிய பொதுமக்களை மிகுந்த பாதிப்பிற்கு உண்டாக்கும்.
வங்கியில் நகை கடனை அசல் மற்றும் வட்டி என முழுவதும் கட்டி திரும்ப அடமானம் வைப்பது என்பது சாமானிய மக்களுக்கு சாத்தியமல்லாத ஒன்றாகும்.
அடமானம் வைக்கும் நகைக்கு நகை வாங்கிய இரசீது கொடுப்பது என்பது தற்போது வாங்க கூடிய நகைகளுக்கு சாத்தியமாகும். பழைய நகைகளுக்கு இது சாத்தியமில்லாத ஒன்றாகும். இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் ஆகவே இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



