தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ச.திவ்யதர்ஷினி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அ.லலிதா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



