கன்னியாகுமரி, டிச.16:
புன்னார்குளம் அருள்மிகு ஸ்ரீஉஜ்ஜைனி மாகாளி அம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், ரோஜா, செவ்வந்தி, மல்லிகை உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அனைவருக்கும் கோயில் பூஜாரி குமார் பிரசாதம் வழங்கினார்.