தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி முன்னிலையில் நடைபெற்றது .
உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர்
செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் பெ. சுப்ரமணியம் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி மண்டல இணை இயக்குனர் கல்வியல் கல்லூரி சிந்தியா செல்வி உதவி ஆணையர் நர்மதா கல்லூரி முதல்வர் கண்ணன் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.