பூதப்பாண்டி – நவ – 14-
அழகியபாண்டியபுரம் வனச்சரகத்திற்குட்பட்ட கிரிப்பாறை வனப்பகுதியில் வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து சுற்றி திரிந்து போட்டோ எடுத்து கொண்டிருந்தது தெரிய வந்து.அவர்களை பிடித்து விசாரணை செய்த போது புறாவிளை காணிகுடியிருப்பை சேர்ந்த சுபின்( 22) என்பதும் அவ்வழியாக வனப்பகுதிக்குள் மோட்டார் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த இருசக்கர வானத்தில் பந்தயத்திற்கு செல்வது போல வனப்பகுதிக்குள் வேகமாகவும், கவனக்குறைவாகவும் சென்று வனப்பகுதிக்குள் போட்டோவும் எடுத்தது தெரிய வந்தது இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.விதியை மீறி அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தவர்களுக்கு மாவட்ட வன அதிகாரி உத்தரவின் பேரில் வனத்துறையினர் அவர்கள் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு 50,000/- ரூபாயும்
அபராதம் விதித்தனர்.