உள்ளாட்சியில் ஊழல் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை வலியுறுத்தி
கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
அரியலூர், ஜூன்;29
அரியலூர்மாவட்டம்,ஆண்டிமடம் வட்டத்தில் உள்ளது, பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சி.
இந்த ஊராட்சியில் தலைவராக செயல்பட்டு வரும் ராஜாஜி என்பவர் கடந்த 14 மற்றும் 15 வது நிதி குழு மானியங்களில் செய்யப்பட்ட பணிகளுக்கு அதற்கான தொகையை எடுத்துவிட்டு மீண்டும் அதே பணிகளை காட்டி ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் பதித்ததாக போலி ஆவணங்களை தயார் செய்து நிதி முறை கேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் பராமரிப்பு பணிக்காக சுமார் ரூபாய் 3 லட்சத்திற்கும் மேல் பணிகளை செய்யாமல் பணத்தை கையாடல் செய்ததாகவும், 100 நாள் வேலை திட்டத்தில் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு பணி செய்ததாக பணம் போட்டு எடுத்துள்ளதாகவும், இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடந்தையாக செயல்படுவதாகவும் இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் இன்று பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் மாலாராணி தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து ஊழல் முறை வீட்டில் ஈடுபட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்