சுசீந்திரம்.நவ.8
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் சாத்தான் கோவில் தெருவை சார்ந்தவர் கண்ணன் 37 இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார் நேற்று சுசீந்திரம் காவல்துறையினர் தெங்கம்புதூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகத்தின் படி நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் கண்ணன் அதிக லாப நோக்கத்தோடு அரசாங்கத்திற்கு புறம்பாக விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.