தென்காசி மாவட்டம் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் திராவிட இயக்க பேரவை பொதுச் செயலாளர் மதிவதனி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் திவான் ஒலி, அழகு சுந்தரம், தென்காசி ஒன்றிய குழு தலைவர் சேக் அப்துல்லா, இளைஞரணி ரகீம், இசக்கி பாண்டியன் ,செல்வம் ,அழகு, தமிழ் சங்கர், ராமராஜ், பிரேம்குமார் ,முத்து ,சுப்பிரமணியன், சபிக்அலி , மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



