புதுக்கடை, நவ. 12 –
புதுக்கடை அருகே மணியாரம்குன்று பகுதியை சேர்ந்தவர் சூசைமுத்து (72). இவரது இவர் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவதினம் இரவு மாடுகளுக்கு ஆகாரம் கொடுத்த பின் சூசைமுத்து தூங்க சென்றார். அடுத்த நாள் அதிகாலை வந்து பார்த்த போது, ஒரு பசு மாட்டை காணவில்லை. விசாரித்த போது நம்பர் தெரியாத மினி பிக்கப் வாகனத்தில் வந்த நபர்கள் வீட்டு மாட்டு தொழுவத்தில் நின்ற சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பசு மாட்டை அவிழ்த்து சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து சூசைமுத்து புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பசு மாடு திருடி சென்ற மர்ம நபர்களை குறித்து விசாரித்து வருகின்றனர்.


