திருவள்ளூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி ஏற்றதை தொடர்ந்து எம்எல்ஏ. மற்றும் நகர் மன்றத் தலைவர் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்,
திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக பொறுப் பேற்றுக் கொண்டார்.
இதனை தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் நகர் மன்றத் தலைவர் உதயமலர், பாண்டியன் ஆகியோர் ஏற்பாட்டில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா,
டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கும், மற்றும் வாகனங்களில் சென்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்வின் போது. நகர் மன்ற துணைத் தலைவர் சி.சு. ரவிச்சந்திரன், மன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்
ஜான், பிரபாகரன், அயூப்அலி, செல்வகுமரன், தாமஸ் (எ) ராஜ்குமார், வசந்தி வேலாயுதம் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.