தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை யில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு – மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வழங்கினார்.
தஞ்சாவூர். ஜன.10.
தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தமிழர் திருநாளாம் தைப்பொங்க லை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலு க்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு. பயனாளி ஒருவருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு நீள கரும்பு என பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப் பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, சைதாப்பேட்டை, சின்னமலை நியாயவிலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் , மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இத்துடன் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1246 நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட 7,05,579 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2.47/- கோடி மதிப்பிலான 2025 ஆம் ஆண்டு பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இயலாதவர்கள் 13.01.2025 அன்று பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.தமிழ் நங்கை, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதி வாளர் மேலாண்மை இயக்குநர் வெ.பெரியசாமி, தஞ்சாவூர் சரக துணைப்பதிவாளர் ரா.விநாசாந் தினி,தஞ்சாவூர் பொது விநியோக திட்டதுணைப்பதிவாளர் ஆ.சு.லேகா,தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் ஆ.கேத்ரீன், துணைப்பதிவாளர் (பயிற்சி) ஆபிரான்சிஸ் சகாய ஆரோக்கியமேரி, இணை இயக்குநர் (வேளாண்மை) வித்யா மாவட்ட வழங்கல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.